TNPSC Thervupettagam

சாணக்கியா பாதுகாப்புப் பேச்சுவார்த்தை 2025

December 4 , 2025 15 hrs 0 min 31 0
  • 2025 ஆம் ஆண்டு சாணக்கியா பாதுகாப்புப் பேச்சுவார்த்தை ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
  • இந்த நிகழ்வின் கருத்துரு: " Reform to Transform: Sashakt, Surakshit aur Viksit Bharat” (Empowered, Secure and Developed India) என்பதாகும்.
  • பாதுகாப்பு துறையின் சீர்திருத்தங்கள், தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு, உள்நாட்டுமய மாக்கல் மற்றும் இந்தியாவிற்கான உத்தி சார் தன்னிறைவு பற்றி விவாதிப்பதே இதன் நோக்கமாகும்.
  • 2047 ஆம் ஆண்டிற்குள் இந்திய இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான ஒரு செயல் திட்டத்தினை இந்தப் பேச்சுவார்த்தை அறிவித்தது.
  • HOP 2032 ஆனது உடனடி மேம்பாடுகள் மற்றும் வழக்கமான அச்சுறுத்தல்களுக்குத் தயாராக இருப்பதில் கவனம் செலுத்துகிறது.
  • STEP 2037 ஆனது செயற்கை நுண்ணறிவு, இணையவெளித் தாக்குதல் மற்றும் வலை அமைப்புச் செயல்பாடுகள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தைச் சேர்க்கிறது.
  • JUMP 2047 ஆனது முழு நவீனமயமாக்கல், பல துறை மேன்மை மற்றும் உத்தி சார் சுயாட்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதில் கவனம் செலுத்தும் பகுதிகளில் பல-களப் போர் தயார்நிலை, செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையவெளித் திறன்கள், பொது-இராணுவ ஒத்துழைப்பு மற்றும் விரைவான பாதுகாப்பு கொள்முதல் ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்