முதன்முறையாக, விரைவு ரேடியோ அலை உமிழ்வு (Fast Radio Bursts-FRB) எனப்படும் ஆற்றல் வாய்ந்த சில அண்ட சமிக்ஞைகளைப் பயன்படுத்தி பேரண்டத்தின் இதுவரை தவற விட்ட சாதாரணப் பருப்பொருளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இது வரை, பேரண்டத்தின் சாதாரண அல்லது பேரியோனிக் பொருளில் குறைந்தது பாதி கணக்கிடப்படவில்லை என்பதை அறிவியலாளர்கள் அறிவர்.
கரும்பொருள் மற்றும் இருண்ட ஆற்றல் என்பது பேரண்டத்தின் மிகப் பெரும்பகுதியை நிரப்பி உள்ளன.
ஆனால் பேரண்டத்தின் மீதமுள்ள பகுதியானது அண்ட பேரியான்கள் அல்லது மிகவும் சாதாரணப் பருப்பொருளால் ஆனது.