TNPSC Thervupettagam

சாதி இடஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்ற வழக்கு தள்ளுபடி

October 17 , 2026 5 days 119 0
  • பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து இஸ்லாத்திற்கு மாறுபவர்களுக்கான இட ஒதுக்கீடு சலுகைகள் தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  • இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாத்திற்கு மாறுவதன் மூலம் தானாகவே அறிவிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமூகத்தின் உறுப்பினராகி விட முடியாது.
  • ஒரு நபரின் முந்தைய மதம் மற்றும் சாதி அடையாளத்தின் அடிப்படையில் அரசியலமைப்பின் 16(4) வது சரத்து தானாகவே இடஒதுக்கீடுச் சலுகைகளை நீட்டிக்காது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • பட்டியலிடப்பட்ட சாதியினரை அறிவிக்க அரசியலமைப்பின் 341 வது சரத்து குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கிறது; அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதியினர்) ஆணை, 1950 இன் கீழ், பட்டியலிடப்பட்ட சாதி அந்தஸ்து இந்து மதம், சீக்கிய மதம் அல்லது புத்த மதத்தை பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே என வரையறுக்கப் பட்டுள்ளது.
  • ஜமாத் மதமாற்றச் சான்றிதழ் மட்டுமே சட்டபூர்வமான பிற்படுத்தப்பட்ட வகுப்பு உறுப்பினராக இருப்பதை நிறுவாது; தமிழ்நாடு அரசின் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத ஆணை நிராகரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்