தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் 'தமிழ்நாடு குறைக்கடத்தி சூழலமைப்புத் திட்டம் 2026' ஐத் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் ஒரு முன்னணி குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுவியல் உற்பத்தி மையமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கும் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது மத்திய அரசின் குறைக்கடத்தி திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கு கூடுதல் சலுகைகள் மற்றும் தமிழ்நாட்டின் குறைக்கடத்தி சூழலமைப்பிற்கு முக்கியமான பிற தகுதியான திட்டங்களுக்கான ஆதரவு என இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டமானது 2026 ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று அங்கீகரிக்கப்பட்ட மத்திய அரசின் செமிகான் இந்தியா திட்டம் 2.0 க்கு (Semicon India Programme 2.0) துணையாக இருக்கும்.
செமிகான் இந்தியா 2.0 திட்டமானது சிப்/சில்லு வடிவமைப்பு, செதில் உருவாக்கம், உபகரணங்கள், மூலப்பொருட்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட குறைக்கடத்தி மதிப்புச் சங்கிலியில் கவனம் செலுத்துகிறது.