சாதி இடஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்ற வழக்கு தள்ளுபடி
October 17 , 2026 5 days 115 0
பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து இஸ்லாத்திற்கு மாறுபவர்களுக்கான இட ஒதுக்கீடு சலுகைகள் தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாத்திற்கு மாறுவதன் மூலம் தானாகவே அறிவிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் சமூகத்தின் உறுப்பினராகி விட முடியாது.
ஒரு நபரின் முந்தைய மதம் மற்றும் சாதி அடையாளத்தின் அடிப்படையில் அரசியலமைப்பின் 16(4) வது சரத்து தானாகவே இடஒதுக்கீடுச் சலுகைகளை நீட்டிக்காது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பட்டியலிடப்பட்ட சாதியினரை அறிவிக்க அரசியலமைப்பின் 341 வது சரத்து குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கிறது; அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதியினர்) ஆணை, 1950 இன் கீழ், பட்டியலிடப்பட்ட சாதி அந்தஸ்து இந்து மதம், சீக்கிய மதம் அல்லது புத்த மதத்தை பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே என வரையறுக்கப் பட்டுள்ளது.
ஜமாத் மதமாற்றச் சான்றிதழ் மட்டுமே சட்டபூர்வமான பிற்படுத்தப்பட்ட வகுப்பு உறுப்பினராக இருப்பதை நிறுவாது; தமிழ்நாடு அரசின் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத ஆணை நிராகரிக்கப்பட்டது.