TNPSC Thervupettagam

காசநோய் இல்லாத ஊராட்சி முன்னெடுப்பு

October 18 , 2026 4 days 93 0
  • காசநோய் இல்லா ஊராட்சி முன்னெடுப்பின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 2,390 கிராம ஊராட்சிகள் 2025 ஆம் ஆண்டிற்கான காசநோய் (TB) இல்லாத ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • 1,000 மக்கள் தொகைக்கு 30 அல்லது அதற்கு மேற்பட்ட காசநோய் அறிகுறி உள்ளவர்களை பரிசோதித்தல், 1,000 மக்கள் தொகைக்கு ஒன்று அல்லது அதற்கும் குறைவான காசநோய் அறிவிப்பு விகிதம் மற்றும் அறிவிக்கப்பட்ட மருந்து-உணர் திறன் கொண்ட காசநோயாளிகளிடையே 90% அல்லது அதற்கு மேற்பட்ட சிகிச்சை வெற்றி விகிதம் ஆகியவை இந்த அளவுகோல்களில் அடங்கும்.
  • தமிழ்நாட்டின் மதிப்பிடப்பட்ட காசநோய் நிகழ்வுகள் 2015 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 192 என்ற அளவிலிருந்து 2024 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்திற்கு 171 ஆகக் குறைந்துள்ளது.
  • விழிப்புணர்வை மேம்படுத்துதல், முன்கூட்டியே கண்டறிதல், பரிசோதனை, சிகிச்சை பின்பற்றுதல் மற்றும் நோயாளிகளுக்கான ஆதரவு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக வட்டார அளவில் 'ஜோஷ்' (JOSH - சுகாதாரத்திற்கான கூட்டுப் படை) குழுக்கள் (காசநோய் முக்த் பாரத் குழுக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன) அறிமுகப்படுத்தப்பட்டன.
  • ஒவ்வொரு ஜோஷ் குழுவிலும் ஒரு முதல் வகுப்பு முகமை அதிகாரி, ஐந்து மை பாரத் (MY Bharat) தன்னார்வலர்கள் மற்றும் ஐந்து தேசிய மாணவர் படை (NCC) மாணவர்கள் இருப்பார்கள்.
  • தமிழ்நாட்டில், முதல் கட்டச் செயலாக்கத்திற்காக தூத்துக்குடி, திருச்சி, கடலூர், தருமபுரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உதவி உள்ளிட்ட ஆதரவை வழங்குவதற்காக தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (NTEP) மற்றும் நிக்ஷய் மித்ரா (Ni-kshay Mitra) முன்னெடுப்புடன் இணைந்து இத்திட்டம் செயல்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்