TNPSC Thervupettagam

சாம்பல் நிற இருவாச்சிப் பறவைகள் பாதுகாப்பு

July 18 , 2026 10 days 87 0
  • இந்திய சாம்பல் நிற இருவாச்சி (ஓசிசெரோஸ் பைரோஸ்ட்ரிஸ்) 60 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தின் கிர் காடுகளுக்குத் திரும்பி, தொடர்ந்து நான்காவது ஆண்டாக வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்துள்ளது.
  • இந்த இனம் IUCN (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) செந்நிறப் பட்டியலில் 'தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இதன் மறு அறிமுகத் திட்டம் 2021 ஆம் ஆண்டில் தொடங்கியதுடன் அப்போது குஜராத்தின் ஆரவல்லி காடுகளில் உள்ள ஆரோக்கியமான இருவாச்சி பறவைகளின் கூட்டத்தில் இருந்து 40 பறவைகள் கிர் காடுகளில் விடுவிக்கப்பட்டன.
  • அவற்றின் உயிர்வாழ்வு, வாழ்விடப் பயன்பாடு, நகர்வு மற்றும் இனப்பெருக்க நடத்தை ஆகியவற்றைக் கண்காணிக்க செயற்கைக்கோள் கண்காணிப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டது.
  • இருவாச்சிப் பறவைகள் வறண்ட கலப்பு இலையுதிர் மற்றும் தேக்குக் காடுகளை விரும்புகின்றன என்பதுடன் மேலும், இவை விதை பரவல் மற்றும் காடு மீளுருவாக்கம் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்