TNPSC Thervupettagam

சாஹேல் லித்தியம் மோதல்

August 22 , 2026 2 days 56 0
  • ஆப்பிரிக்காவின் சாஹேல் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் லித்தியம் பிரித்தெடுத்தல் கனிம வர்த்தகத்திலிருந்து ஆயுதக் குழுக்கள் லாபம் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.
  • மின்சார வாகன (EV) மின்கலன்கள், திறன்பேசிகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சேமிப்பு ஆகியவற்றிற்கு லித்தியம் முக்கியமானது, இதனால் இக்கனிமத்திற்கான உலகளாவியத் தேவை அதிகரிக்கிறது.
  • மாலி, நைஜர், புர்கினா பாசோ, சாட் மற்றும் நைஜீரியாவில் உள்ள ஆயுதக் குழுக்கள் வருவாயைப் பெருக்க பலவீனமான நிர்வாகம், முறைசாரா சுரங்கத் தொழில் மற்றும் எல்லை தாண்டிய கடத்தல் ஆகியவற்றை சுரண்டுகின்றன.
  • அக்குழுக்கள் சுரங்கத் தொழிலாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது வரி விதிக்க முடியும் மற்றும் சுரங்கப் பகுதிக்கான அணுகலைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.
  • லித்தியம் மூலம் கிடைக்கும் வருவாய் மோதல்களுக்கு நிதியளிப்பதைத் தடுக்க, வலுவான சுரங்க ஒழுங்குமுறைகள், கனிமங்களைக் கண்காணிக்கும் அமைப்புகள் மற்றும் உள்நாட்டு லித்தியம் பதப்படுத்துதல் ஆகியவை அவசியமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்