அருணாச்சலப் பிரதேசத்தில் திபாங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள சிசேரி நதிப் பாலத்தை மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
200 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலமானது திபாங் பள்ளத்தாக்கிற்கும் சியாங்கிற்கும் இடையில் ஒரு இணைப்பை வழங்குகின்றது.
இந்தப் பாலமானது எல்லைப்புறச் சாலைகள் அமைப்பின் (Border Roads Organisation - BRO) “பிரம்மன்க் திட்டம்” என்ற ஒரு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது.
வர்தக், அருணங்க், பிரம்மங்க், மற்றும் உதயக் ஆகிய BROன் நான்கு திட்டங்கள் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ளன.
இந்தப் பாலமானது இராணுவத்தின் பார்வையில் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றது. இது டிரான்ஸ் அருணாச்சல் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக விளங்கும்.