2019 ஆம் ஆண்டில் மே 16 ஆம் தேதி முதல் மே 22 ஆம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெற்ற “சிம்பெக்ஸ்-2019” என்ற பயிற்சியில் இந்தியக் கடற்படைக் கப்பல்களான கொல்கத்தா மற்றும் சக்தி ஆகியவை கலந்து கொண்டன.
சிங்கப்பூர் இந்தியா கடல் சார்ந்த இருநாட்டுப் பயிற்சி (SIMPEX - Singapore India Maritime Bilateral Exercise) என்பது இந்தியக் கடற்படை மற்றும் சிங்கப்பூர் குடியரசின் கடற்படை ஆகியவற்றினால் நடத்தப்படும் இரு நாடுகளுக்கிடையேயான ஒரு வருடாந்திர கடற்பயிற்சியாகும்.
இது 1993 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இந்தக் கடற்படைப் பயிற்சியில் ஐஎன்எஸ் கொல்கத்தா மற்றும் ஐஎன்எஸ் சக்தி ஆகியவற்றைத் தவிர்த்து, நீண்ட வரம்பு கொண்ட கடல்சார் ரோந்து விமானமான போசிடோன் – 8I என்ற விமானமும் கலந்து கொண்டது.