- 2019 ஆம் ஆண்டுக்கான சிறப்புப் பாதுகாப்புப் படை (திருத்த) மசோதாவை (Special Protection Group - SPG) நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
- SPG மசோதாவானது 1988 ஆம் ஆண்டு SPG சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.
- மசோதாவில் முன்மொழியப்பட்ட திருத்தங்களானவை அரசு நிதியில் “மிக முக்கியமான நபரது பாதுகாப்பின்” மீதான நிதிச் சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
திருத்தங்கள்
- SPG பாதுகாப்பு குறைப்பு - பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு (அவருடன் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசிக்கும்) மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படும்.
- கால அவகாசம் குறைப்பு - முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்பத்தினருக்கு அவர்கள் பதவியை விட்டு விலகிய பின் ஐந்து வருட காலத்திற்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கப் படும்.
சிறப்புப் பாதுகாப்புப் படை பற்றி
- பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது உடனடி குடும்ப உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக 1985 ஆம் ஆண்டில் SPG படை தோற்றுவிக்கப் பட்டது.
- 1984 ஆம் ஆண்டில் அப்போதையப் பிரதமரான இந்திரா காந்தி தனது சொந்த மெய்க் காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட பின்னர் இது நிறுவப்பட்டது.
- SPG ஆனது மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் பிற மத்திய & மாநிலக் காவல் படையினரைக் கொண்டுள்ளது.
- குறைந்த அச்சுறுத்தல் காரணமாக இந்தியக் குடியரசுத் தலைவருக்கு SPG பாதுகாப்பு வழங்கப் படுவதில்லை. இவர் இந்திய இராணுவத்தின் குடியரசுத் தலைவருக்கான பாதுகாப்புப் படைப் பிரிவால் பாதுகாக்கப் படுகிறார்.