TNPSC Thervupettagam

சிறார் கொடுமைகள் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு

November 20 , 2019 2085 days 685 0
  • மத்தியப் புலனாய்வுப் பிரிவானது (Central Bureau of Investigation - CBI) ஆன்லைன் (நிகழ்நேர) சிறார் பாலியல் கொடுமைகள் மற்றும் சுரண்டல் (OCSAE - Online Child Sexual Abuse and Exploitation) தடுப்பு/விசாரணைப் பிரிவை புது தில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் அமைத்துள்ளது.
  • இந்தப் பிரிவானது CBIயின் சிறப்பு குற்றப் பிரிவின் கீழ் செயல்பட இருக்கின்றது.
  • இந்தப் பிரிவானது, நாடு முழுவதும் தனது அதிகார வரம்பைக் கொண்டிருக்கும்.
  • இது பின்வருவனவற்றின் கீழ் வரும் குற்றங்களை விசாரிக்க இருக்கின்றது.
    • இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code - IPC) பல்வேறு விதிகள்,
    • பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (Protection of Children from Sexual Offences - POCSO) சட்டம்,
    • பிற தொடர்புடைய சட்டங்களைத் தவிர, தகவல் தொழில்நுட்பச் சட்டம்.
  • இது நிகழ்நேர சிறார் பாலியல் கொடுமைகள் மற்றும் சுரண்டல் ஆகியவை பற்றிய தகவல்களைச் சேகரித்து, அவற்றைப் பரப்புகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்