TNPSC Thervupettagam

உடல்நலம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த லான்செட் கவுண்டவுன் அறிக்கை 2019

November 20 , 2019 2085 days 645 0
  • உடல்நலம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த லான்செட் கவுண்டவுன் அறிக்கை - 2019ன் படி, இந்தியாவில் காலநிலை மாற்றமானது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் காலரா காரணமாக ஏற்படும் தொற்று நோய்கள் ஆகியவற்றை மேலும் அதிகரிக்கும்.
  • 1960களில் இருந்து இந்தியாவில் மக்காச் சோளம் மற்றும் அரிசி ஆகியவற்றின் சராசரி மகசூல் திறனானது கிட்டத்தட்ட 2 சதவீதம் குறைந்துள்ளது என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
  • சோயாபீன் மற்றும் குளிர்கால கோதுமை ஆகிய இரண்டின் சராசரி மகசூல் திறனானது 1 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளது என்று இந்த அறிக்கை கூறுகின்றது.

நோய்கள்

  • கடல் மேற்பரப்பு வெப்பநிலையின் அதிகரிப்பானது இந்தியாவில் காலரா, இரைப்பைக் காய்ச்சல், காயங்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய்களை ஏற்படுத்துகின்றது.
  • மேலும் டெங்கு போன்ற கொசுக்களின் மூலம் பரவும் நோயால் ஏற்படும் இறப்பும் உயர இருக்கின்றது.
  • மாசுபாடு மற்றும் வெப்ப அழுத்தம் ஆகியவை இந்திய தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை பாதிக்கலாம்.

ஈரக் குமிழ் உலக வெப்பநிலை (WBGT - Wet Bulb Globe Temperature) அளவீடு

  • WBGT என்பது சூரிய ஒளியில் உள்ள வெப்ப அழுத்தத்தின் ஒரு அளவீடாகும். மேலும் இந்த அளவீட்டில் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம், சூரிய கோணம் மற்றும் மேகம் (சூரியக் கதிர்வீச்சு) ஆகியவை உள்ளடங்கும்.
  • WBGT அதிகரிப்பானது உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை குறைக்கும்.
  • வெப்ப அலைகள் காரணமாக முதியவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.

காட்டுத் தீ

  • 21 மில்லியன் இந்தியர்கள் காட்டுத் தீக்கு ஆளானதாக இந்த அறிக்கை கூறுகின்றது.
  • இது 152 நாடுகளில் மிக உயர்ந்த அளவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்