மத்தியப் புலனாய்வுப் பிரிவானது (Central Bureau of Investigation - CBI) ஆன்லைன் (நிகழ்நேர) சிறார்பாலியல் கொடுமைகள் மற்றும் சுரண்டல் (OCSAE - Online Child Sexual Abuse and Exploitation) தடுப்பு/விசாரணைப் பிரிவை புது தில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் அமைத்துள்ளது.
இந்தப் பிரிவானது CBIயின் சிறப்பு குற்றப் பிரிவின் கீழ் செயல்பட இருக்கின்றது.
இந்தப் பிரிவானது, நாடு முழுவதும் தனது அதிகார வரம்பைக் கொண்டிருக்கும்.
இது பின்வருவனவற்றின் கீழ் வரும் குற்றங்களை விசாரிக்க இருக்கின்றது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code - IPC) பல்வேறு விதிகள்,
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (Protection of Children from Sexual Offences - POCSO) சட்டம்,
பிற தொடர்புடைய சட்டங்களைத் தவிர, தகவல் தொழில்நுட்பச் சட்டம்.
இது நிகழ்நேர சிறார் பாலியல் கொடுமைகள் மற்றும் சுரண்டல் ஆகியவை பற்றிய தகவல்களைச் சேகரித்து, அவற்றைப் பரப்புகின்றது.