சிறார் நீதி வாரியங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள்
November 28 , 2025 83 days 128 0
362 சிறார் நீதி வாரியங்களில் (JJBs) உள்ள வழக்குகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவை 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ளன.
765 மாவட்டங்களுள் சுமார் 92% மாவட்டங்களில் சிறார் நீதி வாரியங்கள் அமைக்கப் பட்டுள்ளன ஆனால் 24% வாரியங்களில் முழுமையாகப் பணியாளர்கள் இல்லை என்ற நிலையில்30% வாரியங்களில் இணைக்கப்பட்ட சட்ட உதவி பெறும் மையங்கள் இல்லை.
JJBகளில் தாக்கல் செய்யப்பட்ட 1,00,904 வழக்குகளில் பாதிக்கும் குறைவானவை 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் தீர்க்கப்பட்டன.
ஒவ்வொரு JJB வாரியத்திலும், காலியிடங்கள், போதுமான நிதி இல்லாதது மற்றும் பலவீனமான தரவுக் கண்காணிப்பு, அதிகரித்து வரும் பணிச்சுமை ஆகியவற்றுடன் ஆண்டுதோறும் சராசரியாக 154 வழக்குகள் இங்கு நிலுவையில் உள்ளன.
இந்திய நீதி அறிக்கை (IJR) ஆய்வில் ஒழுங்கற்ற பொதுத் தரவுப் பரிமாற்றம், மோசமான நிறுவன ஒருங்கிணைப்பு மற்றும் குழந்தைகளை மையமாகக் கொண்ட சேவை வழங்கலில் இடைவெளிகள் ஆகியன கண்டறியப்பட்டன.
2023 ஆம் ஆண்டில், இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் சிறப்புச் சட்டங்களின் கீழ் 31,365 வழக்குகளில் 40,036 சிறார் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சிறார்களில் சுமார் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
ஒடிசாவில் மிக அதிகபட்சமாக 83% வழக்குகள் நிலுவையில் உள்ளன அதே நேரத்தில் கர்நாடகாவில் மிகக் குறைவாக 35% வழக்குகள் நிலுவையில் உள்ளன.
JJB செயல்பாடுகள் குறித்தத் தரவுகளைச் சேகரிக்க 21 மாநிலங்களில் 250க்கும் மேற்பட்ட தகவல் அறியும் உரிமை (RTI) கோரிக்கைகளை IJR தாக்கல் செய்தது என்ற நிலையில்இது மையப்படுத்தப் பட்ட ஒரு கண்காணிப்பு இல்லாததை எடுத்துக் காட்டுகிறது.