ஒடிசாவின் கேந்திரபாடாவில் உள்ள கஹிர்மாதா கடல் சார் சரணாலயத்தில் நவம்பர் 01 முதல் மே 31 ஆம் தேதி வரை 7 மாத கால மீன்பிடி தடை அமலில் உள்ளது.
அருகி வரும் சிற்றாமைகள்/ஆலிவ் ரெட்லி கடல் ஆமைகளை அவற்றின் இனச் சேர்க்கை மற்றும் கூடு கட்டும் காலத்தில் பாதுகாப்பதே இந்தத் தடையின் நோக்கம் ஆகும்.
இந்த ஆமைகள் நவம்பர் மாதத்தில் இங்கு வந்து சேரும் என்ற நிலையில்இங்கு பெண் ஆமைகள் மார்ச் மாதத்தில் முட்டையிடும்.
வனத்துறையானது பதினான்கு ஆமை பாதுகாப்பு முகாம்களை அமைத்துள்ளது என்ற நிலையில்இதில் மதலி, சசனிபாடா, எகாகுலா மற்றும் பாபுபாலி தீவுகளில் உள்ள நான்கு கடல் சார் முகாம்கள் அடங்கும்.
இந்தச் சரணாலயமானது ஹுகிடோலாவிலிருந்து தம்ரா வரை 1,435 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது என்பதோடுஇங்கு கடற்கரையிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டருக்குள் மீன்பிடித்தல் என்பது தடை செய்யப் பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 606,933 ஆமைகள் முட்டையிட்டன என்ற நிலையில் ஒடிசாவில் உலகின் ஆலிவ் ரெட்லி எண்ணிக்கையில் 50% மற்றும் இந்தியாவின் கடல் ஆமைகளில் 90% காணப்படுகின்றன.