சீனாவின் முதல் டைப் 076 நில நீர்ப் பயன்பாட்டுத் தாக்குதல் கப்பலான சிச்சுவான், அதன் முதல் கடல் சோதனையை முடித்து ஷாங்காய் கப்பல் கட்டும் தளத்திற்குத் திரும்பியது.
அதன் சோதனை ஓட்டத்தில் உந்துவிசை, மின் அமைப்புகள் மற்றும் முக்கிய உள் உபகரணங்கள் அனைத்தும் எதிர்பார்க்கப்படும் தரநிலைகளை பூர்த்தி செய்தன.
இந்தக் கப்பல் ஆனது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நிலையான இறக்கை கொண்ட விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் நீர் நிலப் பயன்பாட்டு உபகரணங்களை இயக்குவதற்கான மின்காந்த விசை விற்பொறி மற்றும் தடுப்பான் அமைப்புகள் இந்தக் கப்பலில் உள்ளன.