அறிவியலாளர்கள் சீனாவின் யுன்னான் மாகாணத்தில் டியான்ஜுனஸ் ரெக்ஸ் (Dianjunus rex - D-rex) என்ற ராட்சத பூஞ்சையைக் கண்டுபிடித்தனர்.
இது 50 செ.மீ உயரம் வரையிலும், 2.2 கிலோ எடை வரையிலும் வளரக்கூடியது, இது அஸ்கோமைகோட்டா (Ascomycota) என்ற பூஞ்சைத் தொகுதியில் அறியப்பட்ட மிகப்பெரிய பூஞ்சை அமைப்பாகும்.
இது சைலேரியல்ஸ் (Xylariales) வரிசையின் கீழ் ஒரு புதிய இனம், பேரினம் (Dianjunus) மற்றும் குடும்பத்தை (Dianjunaceae) குறிக்கிறது.
க்ரிட்டேசியஸ்-பாலியோஜீன் (Cretaceous–Paleogene) பேரழிவிற்குப் பிறகு, சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இதன் குடும்பம் தோன்றியதாக மரபணு பகுப்பாய்வு மதிப்பிடுகிறது.