சீன பண மதிப்பில் “பாண்டா பத்திரங்கள்” - பாகிஸ்தான்
January 1 , 2019 2503 days 889 0
சீனாவின் மூலதனச் சந்தையிலிருந்துக் கடன்களைத் திரட்டுவதற்காக முதன்முறையாக ரென்மின்பி என்ற பணத்தின் மதிப்பிலான பத்திரங்களை (பாண்டா பத்திரங்கள்) வழங்க பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன் மூலம், அமெரிக்காவின் டாலர் மதிப்பிற்கு நிகராக சீனாவின் பண மதிப்பைப் பயன்படுத்துவதற்காக பாகிஸ்தான் ஒரு படி முன்னோக்கி நகர்ந்துள்ளது.
இந்த பத்திரங்கள், மூலதனச் சந்தை திரட்டு முதலீட்டாளர் அடிப்படையை விரிவுபடுத்தவும் சீனாவின் பணமதிப்பான ரென்மின்பியின் மதிப்பை உயர்த்துவதற்கு ஒரு ஆதாரமாகவும் அரசாங்கத்திற்கு உதவுகின்றது.
இதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பெய்ஜிங்குடனான விரிவான வர்த்தகப் பற்றாக்குறைக்கு பாகிஸ்தான் நிதியளிக்க முடியும்.