இஸ்ரோவுடனான அறிவியல் ஒத்துழைப்பு மூலம் இந்தியாவின் வெள்ளி சுற்றுப்பாதை திட்டமான "சுக்ரயானில்" ஸ்வீடன் இணைந்தது.
சுக்ரயான் என்பது வெள்ளியின் வளிமண்டலம், வெளிமண்டலம், எரிமலை மேற்பரப்பு மற்றும் வானிலை அமைப்புகளை ஆய்வு செய்வதற்காக இந்தியா திட்டமிட்டுள்ள கோள்களுக்கு இடையேயான ஒரு திட்டமாகும்.
ஸ்வீடிஷ் விண்வெளி இயற்பியல் நிறுவனம் இந்தத் திட்டத்திற்கான வெள்ளிக் கோள் நடுநிலைப் பகுப்பாய்வி (VNA) கருவியை உருவாக்கும்.
₹1,236 கோடி மதிப்பீட்டிலான இந்தத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை 2024 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்ததுள்ளதுடன் இது LVM-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப் படும்.
19 கருவிகளைச் சுமந்து செல்லும் இந்த விண்கலம், 112 நாள் பயணத்திற்குப் பிறகு 2028 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் வெள்ளியை அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.