TNPSC Thervupettagam

சுண்ணாம்புக்கல் - ஒரு முக்கிய கனிமம்

October 19 , 2025 16 hrs 0 min 18 0
  • சுரங்க அமைச்சகம் ஆனது அனைத்து சுண்ணாம்புக்கல் வகையையும் ஒரு முக்கிய கனிமமாக மறுவகைப்படுத்தியுள்ளது.
  • இனி, சுண்ணாம்புக்கல் சூளைகளில் பயன்படுத்தப்படும் சுண்ணாம்புக்கல் புதிய வகைப்பாட்டின் கீழ் சிறு கனிமமாகக் கருதப்படாது.
  • இந்த மாற்றமானது, இறுதிப் பயன்பாட்டு கட்டுப்பாடுகளை நீக்குகிறது மற்றும் குத்தகைதாரர்கள் எந்த நோக்கத்திற்காகவும் சுண்ணாம்புக்கல்லை விற்க அனுமதிக்கிறது.
  • நிதி ஆயோக் உறுப்பினர் தலைமையிலான அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
  • தற்போதுள்ள சிறு கனிம குத்தகைதாரர்கள் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்திய சுரங்க வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட சுரங்கத் திட்டங்கள் ஆனது, 2027 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அல்லது இந்தியச் சுரங்க வாரியத்திலிருந்து புதிய ஒப்புதல் பெறும் வரை தொடரப் படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்