2005 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை (RTI) சட்டம் அமல்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமை (RTI) சட்டம் ஆனது, ஆளுகையில்/நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காக 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதியன்று இயற்றப்பட்டது.
1990 ஆம் ஆண்டுகளில் இராஜஸ்தானில் மஸ்தூர் கிசான் சக்தி சங்கதன் (MKSS) தலைமையிலான அடிமட்ட அளவிலான செயல்பாடு மற்றும் பொது விசாரணைகளிலிருந்து RTI சட்டம் உருவானது.
இந்த இயக்கமானது 2005 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதியன்று பாராளுமன்றத்தினால் தேசியச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக மாநில அளவிலான பல RTI சட்டங்களுக்கு வழி வகுத்தது.
அரசியலமைப்பின் 19வது சரத்தின் கீழ் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையின் ஒரு பகுதியாக தகவல் அறியும் உரிமையை RTI சட்டம் அங்கீகரிக்கிறது.
2023–24 ஆம் ஆண்டில் 1.75 மில்லியனுக்கும் அதிகமான RTI விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப் பட்டன என்ற நிலையில், மேலும் இது 67,615 நிராகரிக்கப்பட்டப் பதிவுகளுடன் ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததை விட விண்ணப்பங்கள் தாக்கலானது இரு மடங்கு அதிகமாகும்.