ஒருங்கிணைந்த முன் எச்சரிக்கை அமைப்பு (SACHET) என்பது தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தினால் (NDMA) உருவாக்கப்பட்ட இந்தியாவின் பேரிடர் முன்னெச்சரிக்கை தளமாகும்.
இது SMS, கைபேசிகளில் ஒளிபரப்பு, கைபேசிச் செயலி, தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற பல ஊடகங்களைப் பயன்படுத்தி நிகழ்நேரப் புவியிட இலக்கு சார்ந்த முன் எச்சரிக்கைகளை வழங்குகிறது.
இந்த அமைப்பினை தொலைத் தொடர்புத் துறையின் கீழ் உள்ள தொலைத் தொடர்பு மேம்பாட்டு மையம் (C-DOT) உருவாக்கியது.
அனைத்து இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிலும் செயல்படுகின்ற SACHET, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கு எச்சரிக்கைகளை அனுப்புகிறது.
SACHET செயலி இந்திய வானிலை ஆய்வுத் துறையிலிருந்து (IMD) பேரிடர் எச்சரிக்கைகள் மற்றும் வானிலை தகவல்களை வழங்குகிறது.