சுவச் சர்வேக்சன் 2024-25 விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் வழங்கினார்.
இது தேசிய தலைநகரான டெல்லியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறங்கள் விவகார அமைச்சகத்தினால் (MoHUA) ஏற்பாடு செய்யப்பட்டது.
"Waste is Best" என்ற கருத்துருவினை நகர்ப்புற மேம்பாட்டில் சுழற்சி முறையிலான ஒரு பொருளாதாரத்தினை ஊக்குவிப்பதற்கான மையமாக வேண்டி குடியரசுத் தலைவர் விவரித்தார்.
இந்த ஆண்டு, சூப்பர் சுவச் லீக் நகரங்கள் மற்றும் ஐந்து வெவ்வேறு மக்கள்தொகை பிரிவுகளில் முதல் மூன்று தூய்மையான நகரங்கள் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு சுவச் சர்வேக்சன் ஆனது, சிறிய நகரங்கள் "ஒரு நகரம், ஒரு விருது" என்ற கொள்கையின் கீழ் பெரிய நகரங்களுடன் மிகச் சமநிலையில் போட்டியிட உதவும் வகையில், எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் உள்ளடக்கிய மதிப்பீட்டுக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது.
சூப்பர் ஸ்வச் லீக் என்பது சுவச் பாரத் - நகர்ப்புறம் (SBM-U) என்ற திட்டத்தின் சுவச் சர்வேக்சன் கட்டமைப்பின் கீழ் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பிரிவாகும்.
கடந்த சுவச் சர்வேக்சன் விருதுகளில் தொடர்ந்து மிகவும் சிறந்தச் செயல்திறனை வெளிப்படுத்திய நகரங்கள் மட்டுமே சூப்பர் சுவச் லீக் பிரிவில் அடங்கும்.
இந்தூர் நகரானது, மீண்டும் எட்டாவது ஆண்டாக இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரமாக தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
சூரத் இரண்டாவது இடத்தையும், நவி மும்பை மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
விஜயவாடா அவற்றைத் தொடர்ந்து நான்காவது இடத்தைப் பிடித்தது.
அகமதாபாத், போபால் மற்றும் லக்னோ ஆகியவை புதிய தலைமுறை நுட்பத்திலான சிறந்த தூய்மையான நகரங்களாக அறிவிக்கப்பட்டன.
பிரயாக்ராஜ் சிறந்த கங்கை நகரமாக அங்கீகரிக்கப்பட்டது.
துப்புரவுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் அவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்ததற்காக வேண்டி விசாகப்பட்டினம், ஜபல்பூர் மற்றும் கோரக்பூர் ஆகியவை சிறந்த சஃபாய்மித்ரா சுரக்சித் ஷெஹர்ஸ் என்ற ஒரு அங்கீகாரத்தைப் பெற்றன.
மகா கும்பமேளாவின் போது உருவான நகர்ப்புறக் கழிவுகளை மிக வெற்றிகரமாக மேலாண்மை செய்ததற்காக என்று உத்தரப் பிரதேச மாநில அரசு, பிரயாக்ராஜ் மேளா அதிகாரி மற்றும் பிரயாக்ராஜ் மாநகராட்சிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
3 முதல் 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவில், நொய்டா மிகவும் தூய்மையான நகரமாக உருவெடுத்தது, அதைத் தொடர்ந்து சண்டிகர் மற்றும் மைசூர் இடம் பெற்றுள்ளன.
சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவில் அகமதாபாத் முதலிடத்தைப் பிடித்தது.
மைசூர் 3 லட்சம் முதல் 10 லட்சம் மக்கள் தொகை வரம்பிற்குள், தூய்மையான நகரத் தர வரிசையில் சிறப்பானச் செயல் திறனுடன், 'சூப்பர் சுவச் லீக்' (SSL) பிரிவில் இடம் பிடித்தது.
3 லட்சம் முதல் 10 லட்சம் மக்கள் தொகை வரம்பிற்குள் உள்ள மற்ற நகரங்கள் (2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி) சண்டிகர், நொய்டா, உஜ்ஜைன், காந்திநகர் மற்றும் குண்டூர் ஆகியவை SSL நகரங்களின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.