2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் உலக வானிலை அமைப்பு (WMO) ஒரு வலுவான சூப்பர் எல் நினோவுடன் நேர்மறை இந்தியப் பெருங்கடல் இருமுனையம் (Indian Ocean Dipole - IOD) இணையும் என எதிர்பார்க்கிறது.
எல் நினோ என்பது மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு மற்றும் அதற்குக் கீழ் உள்ள நீரின் அசாதாரண வெப்பமயமாதல் ஆகும் என்பதோடு இது இயல்பான வர்த்தகக் காற்றை பலவீனப்படுத்துகிறது அல்லது திருப்புகிறது.
இது இந்தியாவில் பருவமழையைக் குறைப்பதற்கும், உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பதற்கும், வெப்ப அலைகள், வறட்சிகள், காட்டுத்தீ மற்றும் கடல் வெப்ப அலைகள் ஆகியவற்றிற்கும் வழிவகுக்கும்.
2026 ஆம் ஆண்டுக்கான எல் நினோவை, 2026 ஆம் ஆண்டு ஜூன் 11 அன்று தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அறிவித்ததோடு இது வேகமாக வலுவடைந்து வருகிறது.
கடல் மேற்பரப்பு வெப்பநிலை 2.9°C-ஐ தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளதுடன் இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகவும் வலிமையான நிகழ்வுகளில் ஒன்றாக அமைய வாய்ப்புள்ளது.
நேர்மறை IOD என்பது மேற்கு இந்தியப் பெருங்கடலில் வழக்கத்தை விட வெப்பமான நீரையும், கிழக்கு இந்தியப் பெருங்கடலில் குளிர்ந்த நீரையும் குறிக்கிறது. இது இந்தியாவின் மழைப்பொழிவை ஆதரிப்பதோடு, எல் நினோவின் தாக்கத்தை ஓரளவு ஈடு செய்யும்.
இவற்றின் ஒருங்கிணைந்த தாக்கம் உலகின் பல்வேறு பகுதிகளில் அதிக வெப்பம், வறட்சி, வெள்ளம் மற்றும் காட்டுத்தீ போன்ற அபாயங்களை அதிகரிக்கக் கூடும்.