இந்திய இரயில்வே நிர்வாகமானது சூப்பர் வாசுகி சரக்கு என்ற இரயிலின் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டது.
295 ஏற்றப்பட்ட சரக்குப் பெட்டிகள் மற்றும் 6 இயந்திரங்களுடன் இந்தியாவின் மிக நீளமான மற்றும் அதிக எடை கொண்ட சரக்கு இரயிலாக இது விளங்குகிறது.
27,000 டன்களுக்கும் அதிகமான அளவில் நிலக்கரியை ஏற்றிக் கொண்டு இந்த 3.5 கி.மீ. நீளம் கொண்ட சரக்கு இரயிலின் சோதனை ஓட்டமானது மேற்கொள்ளப்பட்டது.
சத்தீஸ்கரில் உள்ள கோர்பா மற்றும் நாக்பூருக்கு அருகிலுள்ள ராஜ்நந்த்கான் ஆகிய பகுதிகளுக்கு இடையே தென்கிழக்கு மத்திய இரயில்வே நிர்வாகம் இந்தச் சோதனை ஓட்டத்தை நடத்தியது.
இந்திய இரயில்வே நிர்வாகத்தினால் இதுவரை இயக்கப்பட்ட மிக நீளமான மற்றும் அதிக எடை கொண்ட சரக்கு இரயில் இதுவாகும்.