அனுமதி தாமதங்கள், அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் கொள்கை தொடர்பான சிக்கல்கள் காரணமாக 2027 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் புதிய சூரிய ஒளி மின்சக்தி நிறுவல்களில் மந்தநிலை ஏற்படக் கூடும்.
தமிழ்நாடு சுமார் 10,000–11,000 மெகாவாட் (MW) நிறுவப்பட்ட சூரிய ஒளி மின்சக்தித் திறனைக் கொண்டுள்ளது.
திட்ட அனுமதிகளில் ஏற்படும் தாமதங்கள், அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பை (BESS) கட்டாயமாக இணைத்தல் ஆகியவை புதிய நிறுவல்களை மந்தப்படுத்தக்கூடும்.
மின் கடத்தல் கட்டணங்கள் மற்றும் சேமிக்கப்பட்ட மின்சாரத்தை விற்பனை செய்வதற்கான விதிகள் உள்ளிட்ட மாநிலத்தின் BESS கொள்கையின் விதிகளைத் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
மாநிலத்தின் பசுமை ஆற்றல் திறந்தவெளி அணுகல் கொள்கைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்த போதிலும், சில சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களுக்கு 8% வங்கிக் கட்டணம் கோரி நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.
ஒப்புதல்களைப் பெறுவதற்கான ஒற்றைச் சாளர முறை திறம்பட செயல்படவில்லை, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) கொள்கையின் அடிப்படையிலான நுணுக்கமான விவரங்களை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிக்க வேண்டும், மேலும் செலவுகள் அதிகரித்து வருகின்றன.
அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல், அனைத்து புதிய திட்டங்களிலும் BESS இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இது செலவுகளை மேலும் அதிகரிக்கும்.
அந்நிய நேரடி முதலீடுகளின் ஒரு பகுதியாக வரும் சூரிய ஆற்றல் திட்டங்களுக்கு ஒற்றைச் சாளர ஒப்புதல் முறை திறம்பட செயல்படுகிறது.
மற்ற திட்டங்களுக்கு, கிராமப்புற உள்ளாட்சித் தலைவர்களிடமிருந்து தொடங்கி பல ஒப்புதல்கள் தேவைப்படுகின்றன.
இவை தாமதங்களுக்கு வழி வகுத்து, செலவுகளை அதிகரிக்கின்றன.
BESS கொள்கை ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருந்தாலும், சேமிக்கப்பட்ட சூரிய ஆற்றல் 24 மணி நேரத்திற்குள் வெளியேற்றப்படுவதை தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் உறுதி செய்ய வேண்டும், அப்போதுதான் மின்னாக்கி அடுத்த நாள் புதிதாக உற்பத்தி செய்யப் பட்ட ஆற்றலைச் சேமிக்க முடியும்.
மேலும் துணை மின் நிலையங்கள் அமைப்பது மற்றும் பல்வேறு அரசுத் துறைகளுக்குச் சொந்தமான நிலங்களில் மின் இணைப்புகள் அமைப்பதற்கான வழி உரிமைச் சவால்களுக்குத் தீர்வுகள் காண்பது போன்றவை, முதலீட்டாளர்கள் எதிர் கொள்ளும் மற்ற சிக்கல்களில் அடங்கும், இவை சூரிய ஆற்றல் திட்டங்களின் வேகத்தைக் குறைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.