சூரியனின் தென் துருவத்தின் முதல் ஒளிப்படக் காட்சி மற்றும் படங்கள் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் சூரியச் சுற்றுக்கல விண்கலத்தினால் (Solar Orbiter) புவிக்கு அனுப்பப் பட்டுள்ளன.
சூரியப் புயல்கள் மற்றும் அதன் அமைதியான காலங்களுக்கு இடையில் சூரியனின் செயல்பாட்டுச் சுழற்சி நிலைகள் எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிவியலாளர்கள் அறிய இந்தப் புதிய படங்கள் உதவும்.
இந்தச் சுற்றுக்கலமானது சூரியனின் வெவ்வேறு அடுக்குகளில் உள்ள சில வேதியியல் கூறுகள் மற்றும் அவற்றின் இயக்கத்தின் புதிய படங்களையும் படம் பிடித்துள்ளது.
இவை SPICE எனப்படும் கருவியைப் பயன்படுத்தி எடுக்கப் பட்டுள்ளன.