இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் என்ற நிறுவனமானது அதன் காப்புரிமைப் பெற்ற, உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட சூர்யா நூதன் எனப்படுகின்ற சூரியசக்தியினால் இயங்கும் ஒரு சமையல் அடுப்பினை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்த எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையத்தின் (IOC) ஃபரிதாபாத் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தினால் சூர்யா நூதன் உருவாக்கப்பட்டது.
சூரியசக்தியினால் இயங்கும் இந்தச் சமையல் அடுப்பானது இந்தியாவில் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வை வெகுவாகக் குறைக்க உதவும்.
இது சர்வதேச அளவில் நிலவும் அதிக புதைபடிவ எரிபொருள் விலையில் இருந்து தனது குடிமக்களைக் காக்கிறது.
இது ஒரு மறு மின்னேற்றம் செய்யக்கூடிய, நிலையான மற்றும் சமையலறையுடன் இணைக்கப் பட்ட வீட்டிற்குள் பயன்படுத்தக் கூடிய ஒரு சூரிய சமையல் அமைப்பு ஆகும்.
சூரியசக்தியினால் இயங்கும் சமையல் அடுப்பானது கலப்பு முறையில் இயங்குகிறது.
எனவே, இது ஒரே நேரத்தில் சூரிய ஆற்றல் மூலமும், பிற துணை ஆற்றல் மூலங்களின் மூலமும் இயங்கச் செய்யும்.