செங்குத்தாக ஏவக் கூடிய குறுகிய வரம்புடைய நிலம் விட்டு வானில் பாயும் ஏவுகணை
December 13 , 2021 1344 days 596 0
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது செங்குத்தாக ஏவக்கூடிய குறுகிய வரம்புடைய நிலம் விட்டு வானில் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
இந்த ஏவுகணையானது ஒடிசா மாநிலக் கடற்கரையினருகே சந்திப்பூரில் அமைந்து உள்ள ஒருங்கிணைந்தப் பரிசோதனைத் தளத்தில் இருந்து பரிசோதிக்கப்பட்டது.
இந்த ஏவுகணையானது மிகவும் குறைவான உயரத்தில் உள்ள மின்னணு இலக்கினை நோக்கி, ஒரு செங்குத்து ஏவுகலனிலிருந்து ஏவப்பட்டது.