TNPSC Thervupettagam

ஆயுத விற்பனையில் முன்னணியிலுள்ள முதல் 100 நிறுவனங்களில் 3 இந்திய நிறுவனங்கள்

December 14 , 2021 1343 days 589 0
  • 2020 ஆம் ஆண்டில், ஒருங்கிணைந்த ஆயுத விற்பனையில் முன்னணியிலுள்ள முதல் 100 நிறுவனங்களில் 3 இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
  • உலகளாவிய அளவில் ஆயுத வர்த்தகத்தினைக் கண்காணிக்கும் ஸ்டாக்ஹோல்ம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு புதிய அறிக்கையில் இத்தகவலானது கூறப் பட்டுள்ளது.
  • அந்த 3 இந்திய நிறுவனங்களாவன; இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிமிடெட், இந்திய ஆயுதத் தொழிற்சாலை மற்றும்  பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆகியனவாகும்.
  • இவற்றுள் இந்திய ஆயுதத் தொழிற்சாலையை உள்ளடக்கிய ஆயுதத் தொழிற்சாலை வாரியமானது கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக 7 புதிய பொதுத் துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.
  • இந்த 3 நிறுவனங்கள் 2019 ஆம் ஆண்டில் ஆயுத விற்பனையில் முன்னணியில் இருந்த முதல் 100 நிறுவனங்கள் பட்டியலிலும் இடம் பெற்று இருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்