வரம்பு நீட்டிக்கப்பட்ட பினாகா எனும் (Pinaka - Extended Range) பல்குழாய் உள்ளக ஏவுகல அமைப்பானது (Multi Barrel Rocket Launcher System) ராஜஸ்தானின் பொக்ரான் தளத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகல அமைப்பானது புனேயில் அமைந்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வகமான ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் உயர் ஆற்றல் சாதன ஆராய்ச்சி ஆய்வகம் ஆகியவற்றால் வடிவமைக்கப் பட்டுள்ளது.