TNPSC Thervupettagam

செங்குத்தாக தரையிறங்கும் தொழில்நுட்பம்

November 3 , 2025 17 days 91 0
  • மதராஸின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் செங்குத்தாகப் புறப்படும் விமானங்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs) ஆகியவற்றிற்கான மித வேகத்திலான தரையிறங்கும் தொழில்நுட்பத்தில் ஒரு திருப்புமுனையை எட்டியுள்ளனர்.
  • தேவையான தரையிறங்கும் வேகத்தை அடைய அவர்கள் நிகழ்நேரக் கலப்பு நுட்ப ஏவுகல த்ரஸ்டர்/உந்துவிசை இயந்திரத்தினை மெய்நிகர் மாதிரியாக்க / உருவகப் படுத்துதலுடன் ஒருங்கிணைத்தனர்.
  • சோதனையின் போது வினாடிக்கு 0.66 மீட்டர் (மீ/வி) என்ற தரை இறங்கு/தொடும் வேகம் எட்டப்பட்டது.
  • செங்குத்தாக தரையிறங்கும் தளங்களுக்கு திரவ இயந்திரங்களை விட கலப்பு வகை ஏவுகல மோட்டார்கள்/விசைப்பொறிகள் பாதுகாப்பானவை மற்றும் குறைவான சிக்கல் உடையவை என்று கண்டறியப்பட்டது.
  • இந்தக் குழுவினர், பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக அழுத்தப் பட்ட காற்றை ஆக்ஸிஜனேற்றியாகப் பயன்படுத்தி ஒரு கலப்பு வகை ஏவுகல எரி பொருளை உருவாக்கினர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்