TNPSC Thervupettagam

செனாப் - பியாஸ் இணைப்புத் திட்டம்

June 6 , 2026 8 days 125 0
  • இமாச்சலப் பிரதேசத்தில் செனாப்-பியாஸ் இணைப்புச் சுரங்கப் பாதை திட்டத்திற்கு 2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
  • இத்திட்டமானது செனாப் படுகையில் இருந்து பியாஸ் நதி அமைப்புக்கு உபரி நீரைத் திருப்புவதற்காக 8.7 கி.மீ சுரங்கப்பாதையை உள்ளடக்கியது மற்றும் இதன் மதிப்பிடப் பட்ட செலவு ₹2,352 கோடியாகும்.
  • முதல் கட்டம் இமாச்சலப் பிரதேசத்தின் லஹவுல் பள்ளத்தாக்கில் உள்ள கோக்ஸர் கிராமத்திற்கு அருகில் சந்திரா ஆற்றின் குறுக்கே 19 மீட்டர் உயர தடுப்பணையைக் கொண்டுள்ளது.
  • இத்திட்டம் தேசிய நீர்மின் கழகத்தால் (NHPC) செயல்படுத்தப்படும் மற்றும் இது சுமார் 4,000 மெகாவாட் (MW) கூடுதல் நீர்மின் உற்பத்திக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • செனாப் நதியானது, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960 ஆம் ஆண்டில் கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தால் நிர்வகிக்கப்படும் சிந்து நதி அமைப்பின் மேற்கத்திய நதிகளில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்