TNPSC Thervupettagam

சென்ட்ரல் விஸ்டா புதிய அறிவிப்பு

July 16 , 2026 11 days 49 0
  • புது தில்லியில் உள்ள சென்ட்ரல் விஸ்டா பகுதியானது 2026 ஆம் ஆண்டு ஜூலை 12 முதல் 'கர்தவ்யா பவன் வளாகம்' அல்லது 'கர்தவ்யா பவன் பகுதி' என்று அழைக்கப் படுகிறது.
  • இந்த மறுபெயரிடப்பட்ட பகுதியில் அரசு அலுவலகக் கட்டடங்கள், கர்தவ்யா மார்க் மற்றும் சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பிற கட்டுமானங்கள் அடங்கும்.
  • சென்ட்ரல் விஸ்டா என்பது புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லம் (Rashtrapati Bhavan) மற்றும் இந்தியா கேட் ஆகியவற்றிற்கு இடையே அமைந்துள்ள இந்தியாவின் மத்திய நிர்வாக மண்டலமாகும்.
  • இத்திட்டத்தின் கீழ் மூன்று கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, 'கர்தவ்யா பவன்கள்' என்று பெயரிடப்பட்டுள்ளதுடன் இதில் முதலாவது கட்டடம் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் திறக்கப்பட்டது.
  • முன்னதாக, 2022 ஆம் ஆண்டில் ராஜ்பாத் 'கர்தவ்யா பாத்' என்றும், 2025 ஆம் ஆண்டில் புதிய பிரதமரின் அலுவலக (PMO) வளாகம் 'சேவா தீர்த்' என்றும் மறுபெயரிடப் பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்