சென்னை இதழியல் கல்வி நிறுவனம் திறப்பு
August 27 , 2025
10 days
66
- கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
- இந்த நிறுவனமானது சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஒட்டி அமைந்துள்ளது.
- 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் இந்த நிறுவனத்தினை அமைப்பதற்காக அரசாங்கம் 7.75 கோடி ரூபாயை ஒதுக்கியது.
- இந்த நிறுவனமானது, 2025–26 ஆம் கல்வியாண்டு முதல் இதழியல் துறையில் முதுகலை பட்டயக் கல்விப் படிப்பினை வழங்க உள்ளது.
- தி இந்து இதழின் முன்னாள் தலைமை ஆசிரியரும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநருமான N. ரவி அக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
- தி இந்து இதழின் முன்னாள் வாசகர் பதிப்பு ஆசிரியர் A.S. பன்னீர்செல்வன் அந்த நிறுவனத்தின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

Post Views:
66