TNPSC Thervupettagam

செமிகான் இந்தியா திட்டம் 2.0

September 3 , 2026 10 days 67 0
  • இந்தியாவின் குறைக்கடத்தி சார்ந்த சுற்றுச்சூழலை வலுப்படுத்தும் வகையில் ரூ.1.27 லட்சம் கோடி மதிப்பீட்டிலான செமிகான் இந்தியா திட்டம் 2.0-ஐ அரசு அறிவித்துள்ளது.
  • இந்தத் திட்டமானது வேஃபர் உருவாக்கம் முதல் சிப்/சில்லு உற்பத்தி வரையிலான குறைக்கடத்தி மதிப்புச் சங்கிலி மற்றும் அதனுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஆறு தூண்களைக் கொண்டுள்ளது.
  • உலகளாவிய குறைக்கடத்தி மதிப்புச் சங்கிலியில் இந்தியாவை ஒரு முக்கிய நாடாக மாற்றுவதையும், உள்நாட்டு உற்பத்தி மற்றும் சிப்/சில்லு வடிவமைப்பை ஆதரிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வலுவான திறமையான மனித வளத்தை உருவாக்குதல், முதலீட்டுச் சூழல், கொள்கை ஆதரவு மற்றும் எளிதாக தொழில் செய்யும் வசதி ஆகியவற்றில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.
  • செமிகான் இந்தியா திட்டம் 1.0 ஆனது ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களை அடிக்கல் நாட்டுதல் மற்றும் வணிக ரீதியான உற்பத்தியை நோக்கி நகர்த்த உதவியதுடன், தொழில்துறை நம்பிக்கையையும் அதிகரித்தது.
  • செமிகான் 2.0 திட்டமானது, இத்துறையின் நீண்டகால தொலைநோக்குப் பார்வையுடன் முழுமையான குறைக்கடத்தி சார்ந்த சுற்றுச்சூழலில் கவனம் செலுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்