TNPSC Thervupettagam

செமிகான் 2.0 திட்டம்

July 21 , 2026 4 days 96 0
  • இந்தியாவின் குறைக்கடத்திச் சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்காக ₹1.27 லட்சம் கோடி மதிப்பீட்டிலான செமிகான் 2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • குறைக்கடத்தி வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • குறைக்கடத்தி உற்பத்தி சார்ந்த துறைக்கு நீண்டகால கொள்கை ஆதரவை வழங்குவதன் மூலம் செமிகான் இந்தியா திட்டத்தின் (Semicon 1.0) அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
  • சில்லு வடிவமைப்பு, உற்பத்தி உபகரணங்கள் மற்றும் பொருட்கள், உற்பத்தி மையங்கள், குறைக்கடத்தி பொதிகட்டுதல்/பேக்கேஜிங், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) மற்றும் திறன் மேம்பாடு ஆகிய ஆறு பகுதிகளில் செமிகான் 2.0 கவனம் செலுத்துகிறது.
  • ஒரு முழுமையான குறைக்கடத்திச் சூழல் அமைப்பை உருவாக்குவதையும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்