TNPSC Thervupettagam

கரிவலம்வந்த நல்லூர் அகழாய்வுக் கண்டுபிடிப்புகள்

July 21 , 2026 4 days 138 0
  • தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் நடைபெற்ற அகழாய்வில் கற்காலம் முதல் சங்க காலம் வரை தொடர்ச்சியாக மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறை (TNSDA) மூலம் இந்த அகழாய்வு மேற்கொள்ளப் பட்டு வருகிறது என்ற நிலையில் இதற்காக அந்த இடத்தில் 18 அகழாய்வுக் குழிகள் தோண்டப் பட்டுள்ளன.
  • நீண்ட காலக் குடியிருப்பு மற்றும் தொழில்துறை செயல்பாட்டைக் குறிக்கும் நுண் கற் காலக் கருவிகள், செங்கல் கட்டுமானங்கள், இரும்பு வேலை செய்ததற்கான எச்சங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பட்டறைகள் ஆகியவற்றை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • சங்க காலத்தில் இந்த இடம் கைவினைப் பொருட்கள் உற்பத்தி, இரும்புத் தொழில் நுட்பம் மற்றும் வணிகத்திற்கான ஒரு முக்கிய மையமாக இருந்ததை இந்தக் கண்டுபிடிப்புகள் உணர்த்துகின்றன.
  • இந்த அகழாய்வானது, கீழடி அகழாய்வு உட்பட தமிழ்நாட்டின் விரிவான தொல்லியல் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்