இணையவழி நிதி மோசடி வழக்குகளை விரைவாகப் பதிவு செய்து விசாரிப்பதற்காக தமிழ்நாடு அரசு மின்னணு வழி ஜீரோ முதல் தகவல் அறிக்கை (FIR) முறையை நடைமுறைப் படுத்தி உள்ளது.
1930 என்ற தேசிய இணையவழி குற்றத்திற்கு எதிரான உதவி எண் மூலம் தெரிவிக்கப் படும் என்பதோடு ₹1 லட்சத்திற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்ட இணையவழி மோசடிப் புகார்கள், மின்னணு வழி ஜீரோ FIR பதிவுக்காக குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைப் பின்னல் மற்றும் அமைப்புகளுடன் (CCTNS) தானாகவே இணைக்கப் படும்.
பிராந்திய அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல் Zero FIR-களை மின்னணு முறையில் பதிவு செய்ய அனுமதிக்கும் பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா (BNSS) 2023-இன் பிரிவு 173-இன் கீழ் இந்த அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மின்னணு வழி ஜீரோ FIR ஆனது மின்னணு முறையில் சம்பந்தப்பட்ட இணையவழி குற்றப் பிரிவு சார்ந்த காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, சரிபார்ப்புக்குப் பிறகு வழக்கமான FIR ஆக மாற்றப் படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) ஆதரவுடன் தொடங்கப்பட்ட இந்த முன்னெடுப்பானது, விசாரணைகளை விரைவுபடுத்துதல், Golden Hour நேரத்தில் மோசடியான பரிவர்த்தனைகளை முடக்குதல், டிஜிட்டல் சான்றுகளைப் பாதுகாத்தல் மற்றும் மோசடி செய்யப்பட்ட நிதியை மீட்பதை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.