இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் அமைந்துள்ள செமேரு என்ற ஒரு எரிமலை வெடித்ததில் ஏறத்தாழ 14 பேர் கொல்லப்பட்டதோடு பன்னிரண்டுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கிழக்கு ஜாவாவில் அமைந்த செமேரு எரிமலையானது, இந்தோ-ஆஸ்திரேலியத் தட்டு யுரேசியத் தட்டின் கீழ் மூழ்கும் ஒரு மண்டலத்தில் அமைந்துள்ள செயல்பாட்டிலுள்ள ஒரு எரிமலையாகும்.
இது ஜாவாவின் மிக உயரிய எரிமலையாகும்.
இந்தப் படையடுக்கு எரிமலையானது மகாமேரு (பெரிய மலை) என்றும் அழைக்கப் படுகிறது.
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக செமேரு எரிலை வெடித்தது.