உலக சுகாதார அமைப்பானது இந்த அறிக்கையை வெளியிட்டது.
இந்த ஆண்டின் அறிக்கையானது அனைத்து உலக சுகாதார அமைப்புப் பகுதிகளிலும் உள்ள மலேரியா பரவும் நாடுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப் பட்டுள்ளது.
ஒரு விரைவான நடவடிக்கையானது எடுக்கப்படாவிட்டால் இந்த நோய் உடனடியாக மீண்டும் எழுச்சி பெற்று உலகம் முழுவதையும் குறிப்பாக ஆப்பிரிக்காவினை அதிக ஆபத்தில் ஆழ்த்த உள்ளது.
2019 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் மலேரியாவினால் ஏற்படும் உயிரிழப்புகள் 12% அதிகரித்துள்ளன.
பெரும்பாலான பாதிப்புகள், சுமார் 95% பாதிப்புகள், WHO ஆப்பிரிக்கப் பகுதியின் நாடுகளிம் மட்டுமே பதிவாகியுள்ளன.
WHO தென்கிழக்கு ஆசியப் பகுதியில் 83% பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகியுள்ளன.