2021 ஆம் ஆண்டின் 11 மாதங்களில், பருவநிலை மாற்றம் காரணமாக சராசரி உணவு விலைகளானது (பணவீக்கத்தை ஈடு செய்த பிறகு) கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகமாக இருந்ததாக உணவு மற்றும் வேளாண் அமைப்பு கூறியுள்ளது.
பேரிடர்களின் காரணமாக, உலகம் தனது செயல்திறன்மிக்க பயிர் மற்றும் கால்நடை உற்பத்தியில் 4% வரை இழப்பினைக் கண்டு வருகிறது.
பருவநிலை மாற்றமானது தீவிரமான மற்றும் ஒழுங்கற்ற வானிலை நிகழ்வுகளைத் தூண்டி, வறட்சி மற்றும் வெப்ப அலைகளை நீட்டிக்கிறது.
இது பரவலான அளவில் பயிர்ச் சேதத்திற்கு வழி வகுப்பதோடு, நீண்டகாலப் பயிர் விளைச்சலையும் பாதிக்கிறது.
அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட முக்கிய கோதுமை உற்பத்தி நாடுகளில் நிலவும் வறட்சி மற்றும் அதிக வெப்ப நிலை காரணமாக விலை உயர்வைச் சந்தித்துள்ள கோதுமைப் பயிரின் காரணமாக உலகளாவிய உணவு விலையானது உயர்ந்துள்ளது.
பெருந்தொற்றானது ஏற்கனவே பல மில்லியன் கணக்காணவர்களை வறுமையின் பிடியில் தள்ளியுள்ள நிலையில், இந்த விலை உயர்வு உலகின் ஏழைகளையே இன்னும் அதிகமாக பாதிக்கிறது.
உலகிலுள்ள ஒவ்வொரு 3வது நபரும் தனக்குப் போதுமான உணவைப் பெற முடியாத நிலையில் உள்ளனர்.