TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு சார் கணினி முறையை மேம்படுத்தல் – அயர்ன்வுட்

December 3 , 2025 9 days 76 0
  • கூகுள் நிறுவனமானது அயர்ன்வுட் என்ற புதிய கணினி சில்லினை அறிமுகப் படுத்தி உள்ளது.
  • அயர்ன்வுட் என்பது செயற்கை நுண்ணறிவு (AI) பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட 7வது தலைமுறை நுட்பம் சார் டென்சர் செயலாக்க அலகு (TPU) ஆகும்.
  • இது தகவல்களை உருவாக்கப் பெரிய மொழி மாதிரிகள் (LLM) மற்றும் நிபுணர்களின் கலப்புகள் (MoE) ஆகியவற்றிற்கு உகந்ததாக உள்ளது.
  • TPU ஆனது 42.5 எக்ஸாஃப்ளாப்ஸ் கணினி சக்தியை வழங்கி, ஒரு பாட் ஒன்றுக்கு 9,216 சில்லுகளின் செயல்பாட்டை ஆதரிக்கிறது.
  • அயர்ன்வுட் மேம்பட்ட திரவக் குளிரூட்டலைப் பயன்படுத்துகிறது என்பதோடு மேலும் முந்தையத் தலைமுறை சார் நுட்பத்துடன் ஒப்பிடும்போது ஒரு வாட் ஒன்றுக்கு இரு மடங்கு செயல்திறனை வழங்குகிறது.
  • TPU ஆனது செயற்கை நுண்ணறிவிற்கான சிறப்புச் செயலிகள், CPU (மைய செயலாக்க அலகு) மற்றும் GPU (கிராபிக்ஸ் செயலாக்க அலகு) ஆகியவற்றை விட திறம் மிக்கவை, மேலும் தேடல், YouTube மற்றும் DeepMind போன்ற கூகுள் சேவைகளில் பயன்படுத்தப் படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்