TNPSC Thervupettagam

உணவு பாதுகாப்பு எச்சரிக்கை - ஆரமைன் O

December 1 , 2025 11 days 111 0
  • மஞ்சள்/குங்குமப்பூக்களுக்குப் போலியாக அல்லது இனிப்புகளை மேம்படுத்தச் செய்வதற்காக ஆரமைன் O ஆனது சட்டவிரோதமாக உணவுகளில் சேர்க்கப் படுகிறது.
  • இது இந்தியாவில் உணவில் பயன்படுத்த தடை செய்யப்பட்ட ஒரு செயற்கை டைரில் மீத்தேன் அடிப்படையிலான மஞ்சள் சாயமாகும்.
  • இது பிரகாசமான மஞ்சள் நிற ஊசி போன்ற படிகங்களாகத் தோன்றுகின்ற, தண்ணீரில் கரையாது ஆனால் எத்தனால் மற்றும் DMSO (டைமெதில் சல்பாக்சைடு) ஆகியவற்றில் கரையக்கூடியது.
  • இது ஜவுளி, தோல் பதனிடல், அச்சிடுதல், நுண்ணுயிரியல் சாயம், ஆய்வக வினைப் பொருட்கள், காகிதம் மற்றும் மை ஆகியவற்றில் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தப் படுகிறது.
  • நச்சுத்தன்மை ஏற்றம் சார்ந்த அபாயங்களில் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு, பெரிதாக்கப்பட்ட (வீங்கிய) மண்ணீரல், நாளமில்லா சுரப்பிகளின் சீர்குலைவு மற்றும் பிறழ்வு விளைவுகள் ஆகியவை அடங்கும்.
  • இது மனிதர்களுக்குப் புற்றுநோயை உண்டாக்கும் என IARC (புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம்) வகைப்படுத்தியுள்ளது.
  • இதற்கான நாள்பட்ட வெளிப்பாடு நீண்டகால மரபணு மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்