செயற்கை நுண்ணறிவு சார் கணினி முறையை மேம்படுத்தல் – அயர்ன்வுட்
December 3 , 2025 9 days 75 0
கூகுள் நிறுவனமானது அயர்ன்வுட் என்ற புதிய கணினி சில்லினை அறிமுகப் படுத்தி உள்ளது.
அயர்ன்வுட் என்பது செயற்கை நுண்ணறிவு (AI) பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட 7வது தலைமுறை நுட்பம் சார் டென்சர் செயலாக்க அலகு (TPU) ஆகும்.
இது தகவல்களை உருவாக்கப் பெரிய மொழி மாதிரிகள் (LLM) மற்றும் நிபுணர்களின் கலப்புகள் (MoE) ஆகியவற்றிற்கு உகந்ததாக உள்ளது.
TPU ஆனது 42.5 எக்ஸாஃப்ளாப்ஸ் கணினி சக்தியை வழங்கி, ஒரு பாட் ஒன்றுக்கு 9,216 சில்லுகளின் செயல்பாட்டை ஆதரிக்கிறது.
அயர்ன்வுட் மேம்பட்ட திரவக் குளிரூட்டலைப் பயன்படுத்துகிறது என்பதோடு மேலும் முந்தையத் தலைமுறை சார் நுட்பத்துடன் ஒப்பிடும்போது ஒரு வாட் ஒன்றுக்கு இரு மடங்கு செயல்திறனை வழங்குகிறது.
TPU ஆனது செயற்கை நுண்ணறிவிற்கான சிறப்புச் செயலிகள், CPU (மைய செயலாக்க அலகு) மற்றும் GPU (கிராபிக்ஸ் செயலாக்க அலகு) ஆகியவற்றை விட திறம் மிக்கவை, மேலும் தேடல், YouTube மற்றும் DeepMind போன்ற கூகுள் சேவைகளில் பயன்படுத்தப் படுகின்றன.