செறிவூட்டப்பட்ட ஊதா நிற உருளைக்கிழங்கு - குஃப்ரி ஜமுனியா
October 21 , 2026 15 hrs 0 min 79 0
மறைந்திருக்கும் பசியைப் போக்க இந்தியா 'குஃப்ரி ஜமுனியா' என்ற உயிரிச்சத்து செறிவூட்டப்பட்ட ஊதா நிற உருளைக்கிழங்கு வகையை உருவாக்கியது.
இது இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை - மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தால் (ICAR-CPRI) உருவாக்கப்பட்டு 2024 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
இதில் 100 கிராமிற்கு 42.75 மில்லிகிராம் வைட்டமின் சி, 3.22மில்லிகிராம் இரும்புச்சத்து மற்றும் 2.28 மில்லிகிராம் துத்தநாகம் உள்ளது.
இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்ட இயற்கை நிறமிகளான அந்தோசயினின்கள் உள்ளன.
இது அன்றாட உணவின் மூலம் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் உட்கொள்ளலை அதிகரிப்பதன் மூலம் மறைந்திருக்கும் பசியைப் போக்க உதவுகிறது.
இது பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட வட இந்திய சமவெளிப் பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்றது.