TNPSC Thervupettagam

சைகோவ்–டி தடுப்பு மருந்து

August 24 , 2021 1459 days 622 0
  • இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பானது சைடஸ் கேடிலா நிறுவனத்தின் சைகோவ்-டி எனும் தடுப்பு மருந்தின் அவசரகாலப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • சைகோவ்-டி தடுப்பு மருந்தானது இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட, டி.என்.ஏ. அடிப்படையிலான உலகின் முதல் கோவிட்-19 தடுப்பு மருந்தாகும்.
  • 12 வயது சிறுவர்கள் மற்றும் அதற்கும் மேற்பட்ட இளம் பருவத்தினர் உள்ளிட்ட நபர்களுக்கு இம்மருந்தானது வழங்கப்படும்.
  • சைடஸ் கேடிலா நிறுவனமானது கோவிட் சுரக்சா என்ற திட்டத்தின் கீழ் உயிரி தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து இந்தத் தடுப்பு மருந்தினை உருவாக்கி உள்ளது.
  • உயிரித் தொழில்நுட்பத் தொழில்துறை ஆராய்ச்சி உதவிக் கழகத்தினால் இது செயல்படுத்தப் படும்.
  • இது மூன்று தவணையில் செலுத்தக்கூடிய ஒரு தடுப்பு மருந்து ஆகும்.
  • சைடஸ் கேடிலா நிறுவனமானது கேடிலா ஹெல்த்கேர் லிமிடெட் எனவும் அழைக்கப் படுகிறது.
  • இதன் தலைமையகம் குஜராத்திலுள்ள அகமதாபாத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்