TNPSC Thervupettagam

சோனெராட்ஸ் மூஞ்சூறு

December 9 , 2025 16 days 77 0
  • 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதியன்று, உதகமண்டலத்தில் உள்ள ஊட்டி ஏரி அருகே இறந்த ஒரு மூஞ்சூறினை வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் புகைப்படம் எடுத்தனர்.
  • சோனெராட்ஸ் மூஞ்சூறு (டைப்லோமேசோடான் சோனெராட்டி) முதன்முதலில் 1813 ஆம் ஆண்டில் புதுச்சேரிக்கு அருகில் பிரான்சு நாட்டினைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் பியர் சோனெராட்டின் என்பவரால் விவரிக்கப்பட்டது.
  • இந்த இனம் முதன்முதலாக விவரிக்கப்பட்டதிலிருந்து அதன் எந்த உடல் மாதிரியும் இதுவரை சேகரிக்கப்படவில்லை.
  • புகைப்படம் எடுக்கப்பட்ட மூஞ்சூறு, ஆசிய மேட்டு நில மூஞ்சூறு, ஆசிய வீட்டு மூஞ்சூறு, இந்திய மேட்டு நில மூஞ்சூறு மற்றும் கெலார்ட்டின் நீண்ட நகம் கொண்ட மூஞ்சூறு உள்ளிட்ட பிற உள்ளூர் இனங்களிலிருந்து தெளிவான உருவ வேறுபாடுகளைக் காட்டியது.
  • ரோம வடிவம் ஆனது பியர் சோனெராட்டின் முதல் விவரிப்புடன் பொருந்துவதாக நிபுணர்கள் உறுதிப்படுத்தினாலும், அதன் மாதிரிகள் சேகரிக்கப்படாததால் அதன் மறு கண்டுபிடிப்பை உறுதிப்படுத்த முடியாது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்