TNPSC Thervupettagam

ஜன் அவுசாதி வாரம்

March 5 , 2020 1994 days 683 0
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் பிரதான் மந்திரி பாரதிய ஜன் அவுசாதி கேந்திரங்களின் மூலம் நாடு முழுவதும் ஜன் அவுசாதி வாரமானது கொண்டாடப் படுகின்றது.
  • ஜன் அவுசாதி கேந்திர உரிமையாளர்கள் உடல்நலம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு வகையான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
  • இந்த வார அனுசரிப்பின் நான்காவது தினத்தில், ‘சுவிதா சே சம்மன்’ என்ற கருப்பொருளைக் கொண்டு நாட்டில் பெண்களை மேம்படுத்தும் நிகழ்ச்சியானது நடத்தப் பட்டது.
  • பிரதான் மந்திரி பாரதிய ஜன் அவுசாதி பரியோஜனா என்பது மத்திய அரசாங்கத்தின் ஒரு முக்கியமான முயற்சியாகும்.
  • தரமான மருந்துகளை குறைந்த விலையில் வழங்குவதற்கான அதன் முயற்சியானது இப்போது மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்